Recent Posts

Pages: [1] 2 3 ... 7
1
இன்றைய விவாதப் பொருளாக எடுத்துக் கொள்வோம்.
2
மருத்துவர் சமூக வரலாறு

சலூன் கடை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ?

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வளர்கள் சொல்லுகிறார்கள். பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம் வேறொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு 1900 வரை தொடர்ந்தது.

காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம். வீழ்த்தப்பட்ட சமண சமூகத்தில் மருத்துவம் தெரிந்தவர்களை மருத்துவர்கள் என்கிற சாதிப் பிரிவாக ஆக்கி, மருத்துவம் தெரியாதவர்களை வண்ணார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமாக மாற்றி ஊருக்கு ஒதுக்குப் புறம் குடி இருக்க அனுமதிக்கப்பட்டதாகத்தான பண்டைய சாதியம் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவெங்கும், புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆதிசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையே, அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.

இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்.

மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம் 'விதிக்கப்பட்டவை' எவை என்று பார்த்தால்,

* தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடுவது
* இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்
* பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவது
* "மாப்பிள்ளை சவரம்" - திருமணத்தின் முதல் நாளின் போது மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்குதல், அப்போது அவனுக்கு எதேனும் ஆண்மை தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுதல்
* மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே !)
* ஆண் / பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல்
* பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்
* சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அவை இல்லாதவர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்த சமூகத்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றை செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத் தொழிலை தொடர முடியாமல் தங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலை வேறு வழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.

நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது. அதிலும் கிராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு
3
 (மாற்றத்திற்கு உட்பட்டது)


முதல்நாள் நிகழ்வு

08.30 பங்கேற்பாளர் பதிவு (30 min)
09.00 துவக்க உரை (15 min)
09.15 அறிமுக கலந்துரையாடல் (15 min)
09.30 கல்வெட்டியல் துறை வரலாறு (30 min)
10.00 தமிழகத் தொல்லியல் துறையின் வரலாறும் சாதனைகளும் (30 min) 

10.30 தேநீர் விடுப்பு (30 min)

11.00 இந்திய எழுத்துக்கள் (30 min)
11.30 தமிழக வரலாறு (1 Hour)

12.30 உணவு இடைவேளை (1 Hour)

1.30  தமிழ் எழுத்து வளர்ச்சி (கீரல்கள், பிராமி, வட்டெழுத்து)  (1 Hour 30min)
3.00  கல்வெட்டுகளின்  பொது  அமைப்பும் செய்திகளும் / எழுத்துப் பயிற்சி (1 Hour 30 min)

4.30 தேநீர் விடுப்பு/ ஆவணப் படக்காட்சி (30 min)

முதல் நாள் வகுப்பு நிறைவு
----------------------------------------------------

இரண்டாம் நான் நிகழ்வுகள்

09.00 பிற்கால கல்வெட்டுகளும் செய்திகளும் ( 1 Hour)
10.00 சோழர் கல்வெட்டுகளும் செய்திகளும் (1 Hour 30min)

11.30 தேநீர் விடுப்பு: (30min)
12.00 பாண்டியர்/பல்லவ கல்வெட்டுகளும் செய்திகளும் (1 Hour)

01.00 மதிய உணவு இடைவேளை (30 min)

01.30 கோவை மாவட்ட தொல்லியல் (45 min)
02.15 கோவை மாவட்ட கல்வெட்டுகள் (45 min) (தேநீர்)

03.00 கல்வெட்டு களப் பயிற்சி (2 hours)

05.00 கல்வெட்டு வகுப்பு நிறைவுரை (15 min)
4
சரிங்க அண்ணா
5
வணக்கம் விஜய். கீழடி தொல்லியல் களம் பற்றிய சில செய்திகளை திரட்டியுள்ளேன். google Hangout ல் பேசலாம்
7
கீழடி தொல்லியல் களம் பற்றிய விவாதங்களை இங்கு பகிருவோம். புதிதாக இணைய விரும்பும் தோழர்கள் முகநூல் கணக்கினைக் கொண்டு இணையலாம்.
8
பூச்சிமருந்துகளே நீரிழிவு நோயிற்கு (Diabetes) முக்கிய காரணம் என தமிழக ஆராய்சியாளர்கள்   கண்டுபிடித்துள்ளார்.



மதுரை மதுரை காமராஜர் பல்கலைக்கழம் நடத்திய ஆய்வில் பூச்சி மருந்தில் உள்ள "Organophosphate" எனும் வேதிப்பொருளே, மனிதர்களுக்கும் பாலூடிகளுக்கும் நீரிழிவு நோய் மற்றும் Impaired Glucose Tolerance (IGT) எனப்படும் நோய்களைத் தூண்டும் முக்கியக் காரணி எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் முடிவுகள் 'Genome Biology' எனும் ஆய்வறிக்கையில் வெளிவந்துள்ளது. அதில் வயிற்றில் உள்ள பாக்டீரியாவனது Organophosphate னை நுண்ணயிர் சிதைவு செய்து, நீரிழிவு நோயை ஏற்படுத்தும் வேதியல் கூறுகளை உருவாக்குகின்றன என உறுதி செய்துள்ளது.

இவ்வாய்வை மேற்கொண்ட மூலக்கூறு உயிரியல் துறையைச் சேர்ந்த, டாக்டர். கணேஷ் வேல்முருகன் கூறுகையில், "மதுரை பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சுமார் மூவாயிரம்  மக்களிடம் ஆய்வு செய்தோம். இதன் ஆய்வு முடிவுகள், இப் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டவரில் நீரிழிவு நோயினை உருவாக்கும் சாத்தியக்கூறு மூன்று மடங்காக உள்ளது" என்றார்.

மேலும், Dr. வேல்முருகன் கூறுகையில், "வயிற்றில் இருக்கும் பாக்டீரியா இந்தப் பூச்சிக்கொல்லியை சிதைத்து Short-chain fatty acids எனப்படும் அசிடிக் (Ascetic) அமிலமாக மாற்றுகிறது. இந்த அமிலம், கொழுப்பு மற்றும் புரதம்   போன்ற கார்போஹைட்ரேட் அல்லாத உணவையும் குளுக்கோஸாக சிதைத்து ரத்தத்தில் சக்கரையின் அளவை அதிகரிக்கிறது."

எலிகளின் மீது 180 நாட்கள் (12-15 மனித வருடங்களுக்குச் சமம்) ஆய்வு நடத்தப்பட்டது. அதன் இரத்ததில் சக்கரை அளவு 60 நாட்களில் இருந்தே அதிகரிக்கத் துவங்கிவிட்டது. அதன் கழிவுகளை வைத்து மற்ற எலிகளிடம்  ஆராய்ச்சி செய்துப் பார்த்ததில், அது நீரிழிவு நோயை உடனே ஏற்படுத்தியது. எனவே Organophosphate பூச்சிக்கொல்லியின் உந்துதலால் ரத்தத்தில் 'Ascetic acid' உயர்ந்து நிரிழிவு நோய் உண்டாகின்றது என்பது கண்டுபிடிக்கபட்டது. நீரிழிவு நோயால் பாதிக்கபட்டவர்களின் மனிதக் கழிவுகளை ஆய்வு செய்ததிலும், மேற்கூறிய முடிவுகளோடு (Higher Acetate level) முற்றிலும் ஒத்துப்போகின்றன.

“வயிற்றில் இருக்கும் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள், இப்பூச்சிக்கொல்லியினை 'நுண்ணுயிர் சிதைவு (Microbial Degradation)' செய்வதன் மூலம், மனிதர்களில் நீரிழிவு நோய்த் தூண்டும் வேதியல் கூறுகளை உருவாக்குகின்றது. எனவே இந்தப் பூச்சிக்கொல்லியின் உபயோகத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்கவேண்டும்.” என  மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூலக்கூறு உயிரியல் துறையைச் சேர்ந்த ஆய்வாளர் திரு. சுப்பையா அவர்கள் கூறுகின்றார்.

மூலம் - https://pesproppt.wordpress.com/2017/01/29/tn-researchers-show-chronic-exposure-to-insecticide-causes-diabetes/

தமிழாக்கம் - தமிழகன்
9
மார்ச் 31 வரை இளைஞர்கள் போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தடை நிரந்தரமாக நீங்கவில்லை என்றால் தேவைப்படும் பட்சத்தில் போராடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.



ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

இதில் ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, வழக்கறிஞர் அம்பலத்தரசு, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி, வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசினர்.

ராஜசேகரன் பேசியதாவது:

''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் 90% வெற்றியை நோக்கி பயணித்து விட்டோம். ஜல்லிக்கட்டு நடைபெறும் போது பல கிராமங்களில் பாதுகாப்பு வளையங்களுக்கான செலவை ஏற்க முடியவில்லை. மாணவர்கள், இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு வளையங்களுக்கான செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும். இதை கோரிக்கையாக முன்வைக்கிறோம் என்றார்.

கார்த்திகேய சிவசேனாபதி பேசியதாவது:

டெல்லி சென்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்தோம். அவருடன் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து ஒரு விண்ணப்பம் வைத்தோம். 'பீட்டாவை விசாரிக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து பணம் வருவதை பெற்றுக்கொண்டு, இந்திய நாட்டில் இருக்கும் காளைகளை அழிக்கும் முயற்சியில் பீட்டா செயல்படுகிறது என்று கூறினோம்'.

உள்துறை அமைச்சர் அதுகுறித்து புகார் கொடுக்க கூறியிருந்தார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் மேற்கொள்ளலாம்.

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தை மார்ச் 31-ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறோம். இன்று இப்போது போராட்டத்தை தொடர்ந்துகொண்டிருப்பது மாணவர்கள், இளைஞர்களுக்கு சிரமம்தான். அதனால் போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டுகிறோம்.

2 மாதங்கள் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். தடை நிரந்தரமாக நீங்கவில்லை என்றால் தேவைப்படும் பட்சத்தில் போராடலாம்.

அலங்காநல்லூரில் மட்டும் காவல்துறை அனுமதியின் பேரில் போராட்டம் நடத்தினோம். மெரினா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் இளைஞர்கள் தன்னெழுச்சியாகத் தான் போராடினார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு யாரும் தலைவர் இல்லை. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூற எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனவே, போராட்டத்தை தள்ளிவைக்க வேண்டுகிறோம்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசியதாவது:

''ஜல்லிக்கட்டு வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். ஆனால், ஒரு படத்தைப் போட்டு கட்சியைத் திட்டியோ, பிரதமரைத் திட்டியோ வாசகங்கள் வருகின்றன. அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட முடியாது. இந்தப் போராட்டம் தற்போது வெற்றி பெற்று விட்டதால் அதிலிருந்து விலகுகிறேன்'' என்று ஆதி பேசினார்.

Keywords: இளைஞர்கள் போராட்டம், மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கோரிக்கை

தமிழ் இந்து
10
சென்னை, ''தன்னலமில்லாத கலைஞர்களால், கோ வில்களில் கலைகள் வளர்ந்தன,'' என, தமிழக தொல்லியல் துறையின், முன்னாள் துணை கண்காணிப்பாளர், கி.ஸ்ரீதரன் பேசினார்.


 
சென்னை, ஆழ்வார்பேட்டை, சி.பி.ஆர்., இந்தியவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் நிறுவனத்தில், 'கோவில் வரலாற்றில் கலைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில், நேற்று கருத்தரங்கம் நடந்தது.

அதில், ஸ்ரீதரன் பேசியதாவது:

தமிழகத்தில், 35 ஆயிரம் கோவில்கள் உள்ளன. சங்க இலக்கியத்தில், பல்லாயிரம் கோவில்கள் இருந்ததாக குறிப்புகள் உள்ளன. இருப்பினும், அந்த கோவில்கள், மண், மரம், சுதையால் கட்டப்பட்டதால், காலத்தால் அழிந்தன. மகேந்திரவர்ம பல்லவன் தான், முதன் முதலில், திருமூர்த்திகளுக்கு கற்கோவிலை கட்டினான் என்பதை, மண்டகப்பட்டு கல்வெட்டு கூறுகிறது.

சோழர் காலத்தில், ஆயிரக்கணக்கான கோவில்கள், வெளிநாடுகளிலும் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் மட்டும், நுாற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை, காவிரிக் கரையில் எழுப்பினான். ராஜராஜன், தென்கிழக்கு ஆசிய நாடுகளில், ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டினான்.

இதில், சிற்பிகள் உள்ளிட்ட கலைஞர்களின் பங்கு மிகப்பெரியது. அவர்கள், பக்தியால் கலைகளை வளர்த்தனர். குறிப்பாக, பராந்தக சோழன், கண்டராதித்தன், செம்பியன் மாதேவி உள்ளிட்டோர், கோவில் கலைகளை வளர்க்க பாடுபட்டனர்.

கோவில்களில் உள்ள கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓவியங்கள் தான், அந்த கால வரலாற்றைக் கூறும் ஆதாரங்கள்.

கல்வெட்டு, செப்பேடுகளுக்கான தகவலை ஒருவர் அமைக்க, அதை கல்லிலோ, செப்புப் பட்டயத்திலோ, ஒருவர் எழுத, இன்னொருவர் அதை வெட்டியிருக்கிறார். இந்த செய்தியையும், அவற்றில் பதிவு செய்திருக்கின்றனர்.
கோனேரிராஜபுரம் கோவிலை, சாத்தன் குணபட்டன் என்ற, ஆலத்துாருடையான் கட்டினான். அவனுக்கு, ராஜகேசரி மூவேந்த வேளாண் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

அதே கோவிலில் உள்ள, மராட்டியர் கால ஓவியங்களை, சிங்காதனம் என்ற ஓவியன் வரைந்திருக்கிறான். அக்கோவிலின் வரைபடம், திருவிழாக்கள், வரலாறு ஆகியவற்றையும், அவன் வரைந்துள்ளான்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டியது, குஞ்சரமல்லன் ராஜராஜ பெருந்தச்சன் என்பது பலருக்கு தெரியும்.
அந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளில், நேராகவும், எளிதாக படிக்கும் வகையிலும், அழகாகவும் எழுத்துக்களை வடிவமைத்தவன், சாத்தன்குடி வெள்ளாளன் ரவியாளூருடையான் என்பது பலருக்கு தெரியாது.
அக்கோவிலில், சோழர் கால ஓவியத்துக்கு மேல், நாயக்கர் கால ஓவியங்கள் உள்ளன. அவற்றை, அப்பலபெத்ராய ராமய்யா என்ற ஓவியன் வரைந்ததாக குறிப்பு உள்ளது. கோவில் திருப்பணியின் போது, செப்பேடுகள் கிடைக்கின்றன.

இதுவரை, தமிழகத்தில், 19 செப்பேடுகள் கிடைத்துள்ளன. அவற்றில், மன்னரின் பரம்பரை, நன்கொடை, சொத்து, கணக்கீடுகள், சமூக அமைப்பு உள்ளிட்ட தகவல்கள் உள்ளன.

திருவாலங்காடு, ஆனைமங்களம், எசாலம், திருஇந்தளூர், கரந்தை உள்ளிட்ட இடங்களில் கிடைத்த செப்பேடுகளில், அவற்றை வடித்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அழியாமல் பாதுகாத்தால், நம் முன்னோரின் கலை பங்களிப்பு பற்றி, பின்வரும் சந்ததியினர் அறிய வாய்ப்பாக அமையும்.



இவ்வாறு அவர் பேசினார்.

Source|http://www.dinamalar.com/news_detail.asp?id=1657870
Pages: [1] 2 3 ... 7