Author Topic: வேகமாக வற்றும் இந்திய நீர்ஆதாரங்கள்: தமிழகமும் தப்பவில்லை  (Read 410 times)

Rajasekar

  • Administrator
  • Jr. Member
  • *****
  • Posts: 99
  • Karma: +1/-0
  • என்னை அறிந்தால்..
புதுடில்லி : நாடு முழுவதும் உள்ள முக்கியமான 91 நீர்தேக்கங்களில் நீர் கையிறுப்பின் அளவு வேகமாக குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நீர்நிலைகளில் 22 சதவீதம் தண்ணீரின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய நீர் வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஏப்ரல் 21ம் தேதி நிலவரப்படி நாட்டில் உள்ள நீர்நிலைகளில் 34.082 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிற்கே நீர் இருப்பு உள்ளது. 157.799 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு நீர் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது 34.082 பில்லியன் க்யூபிக் மீட்டர் அளவு தண்ணீர் மட்டுமே உள்ளது. இது கடந்த ஆண்டு இருந்ததை விட 35 சதவீதம் குறைவு.



கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இமாச்சல பிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், ஒடிசா, ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், உத்திரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நீர்ஆதாரங்களில் மிக குறைந்த அளவே நீர் இருப்பு உள்ளன. ஆந்திரா மற்றும் திரிபுராவில் உள்ள நீர்ஆதாரங்களில் மட்டுமே பரவாயில்லை என சொல்லும் அளவிற்கு நீர்இருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நீர்ஆதாரங்கள் வேகமாக வறண்டு வருவதால் இந்த கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. பல மாநிலங்களில் ஏற்கனவே கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பொது மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

 

Sitemap 1 2 3 4 5 6 7 8 9